பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு விளையாடி வருபவர்களில் ஒருவர், பிரபல மாடல் 'தர்ஷன்'. இதுவரை இவர் ரசிகர்களிடமும், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடமும் எந்த ஒரு அவ பெயரையும் எடுக்காமல் கூல்லாக தன்னுடைய விளையாட்டை தொடர்ந்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேறிய பார்த்திமா பாபு கூட, தர்ஷன் இறுதி போட்டியாளர்களின் ஒருவராக வர வேண்டும் என தன்னுடைய ஆசையை தெரிவித்தார். மேலும் இந்த வாரம் தலைவர் பொறுப்பில் இருக்க வேண்டிய இவர், திடீர் என விலகியதால் அபிராமி பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே வர தர்ஷனுக்கு உதவியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல சிபாரிசு செய்தது, சனம் ஷெட்டி என ஒருதகவல் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இதனை உறுதி செய்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் AJJ ஜோவின். இவர் பல பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்களை வைத்து போட்டோ ஷூட் செய்தவர்.

சமீபத்தில், நடிகை ரித்விகாவை வைத்து டார்க் போட்டோ ஷூட் செய்திருந்தார். இந்த போட்டோ வைரலாக பரவியது. இதை தொடர்ந்து பிரபல ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த இவர், தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளது, இரண்டு மாதங்களுக்கு முன்பே எனக்கு தெரியும். சனம் தான் அவர் உள்ளே போக உள்ளதா தெரிவித்தார் என கூறியுள்ளார். 

மேலும் தர்ஷன் பற்றி பேசிய ஜோவெல், அவர் ஒரு குழந்தை போல் தான் மிகவும் வெகுளியான பையன். வெளியில் எப்படி இருப்பானோ அதே போல் தான் உள்ளேயும் விளையாடி வருகிறார் என கூறியுள்ளார்.