தல அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகிவரும் ''விவேகம்'' படம் இறுதிகட்டிடத்தில் உள்ளநிலையில் படத்தின் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

அஜித் தற்போது ''விவேகம்'' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக பல்கேரியா சென்றுள்ளார். கடந்த வாரம் தொடங்கிய இறுதிகட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது. படபிடிப்பு மே முதல் வாரத்தில் படப்பிடிப்புகள் அனைத்தையும் முடித்துவிட்டு படக்குழு திரும்பவுள்ளது.

முதலில், 70% படப்பிடிப்பை ஃபாரினில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த திட்டத்தில் தற்போது மாற்றம் ஏற்பட்டு 90% படப்பிடிப்பை ஃபாரினில் நடத்தவுள்ளனர்.

அஜித்தின் சினிமா கேரியரில் இது தான் காஸ்ட்லியான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வியாபாரமும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தமிழக விநியோக உரிமை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக தமிழக திரையரங்க உரிமை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தயாரிப்பு தரப்பு சார்பாக ஆரம்ப தொகையாக 50 கோடி கூறப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விரைவில் தமிழக வியாபாரம் முடிவடையும் என்றும் அஜித்தின் பெஸ்ட் இது தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் மற்றும் சிவா சென்டிமென்ட் படி ''விவேகம்'' படம் ஆகஸ்ட் 10ம் தேதி படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

இயக்குனர் சிவாவின் 10ம் தேதி (வீரம் ஜனவரி 10, வேதாளம் நவம்பர் 10) செண்டிமெண்டும் என்பதால் படம் அகஸ்ட் 10ல் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இது பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.