Ajiths 10 sentimental you know?

தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர், தல அஜித். இவருடைய ரசிகர் பலத்தை சொல்லவேண்டியது இல்லை. அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் "வீரம்", "வேதாளம்", விவேகம் என தொடர்ந்து நடித்து வருகிறார்.

"v" என்கிற எழுத்தை முதல் எழுத்தாக வைத்துதான் பட தலைப்புகள் அமையும், அதே போல் பஸ்ட் லுக், டீசர், பாடல்கள், படம் ரீலீஸ் என எதுவாக இருந்தாலும் அது வியாழக்கிழமையில் தான் நடைபெறும்.

முதல் முதலில் வியாழக்கிழமைகளில் படத்தை ரிலீஸ் செய்யும் ட்ரெண்டை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவரே நம்ப தல தான். இந்த செண்டிமெண்ட் தற்போது பாலிவுட் சினிமாவரை சென்றுவிட்டது.

அதே போல் இவர்கள் இணைத்த படங்கள் 10 ஆம் தேதியன்று தான் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே வெளிவந்த "வீரம்" ஜனவரி 10 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அதை தொடர்ந்து வந்த "வேதாளம்" 2015 ஆம் ஆண்டு நவம்பர் 10 தேதி அன்று ரிலீஸ் செய்யப்பட்டது.

மேலும் தற்போது அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும், விவேகம் படம் ஆகஸ்ட் 10 தேதி உறுதியாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் அன்று வியாழக்கிழமையும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஆராய்ந்து உங்களுக்காக பகிர்கிறது 'NEWSFAST' இணையத்தளம்...