'விஸ்வாஸம்’ படப்பிடிப்பு முடிந்து தன் பகுதிக்கான டப்பிங் பேசும் பணிகளையும் அஜீத் முடித்துவிட்டதால் தனது தக்‌ஷா மாணவர் குழுவினருடன் இனி அதிக நேரம் செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாணவர்களுடன் அஜீத் இணைந்து ஆளில்லா விமானத்தை இயக்கும் புகைப்படங்கள் முகநூல், ட்விட்டர்களில் ட்ரெண்ட் ஆகிவருகின்றன.

அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.ஐ.டி. கேம்பஸில் ஏரோநேடிக் பயிலும் மாணவர்களுடன் அஜீத் இணைந்து உருவாக்கிய தக்‌ஷா குழு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அவ்வப்போது இம்மாணவர்களுடன் அளவளாவி ஆலோசனைகள் சொல்லிவந்த அஜீத், இனி அடுத்த படத்தை அறிவித்து ஷூட்டிங் செல்ல இன்னும் குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். 

இந்த ஓய்வு நேரத்தில் பெரும்பகுதியை இம்முறை அஜீத் இம்மாணவர்களுடனேயே செலவழிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாணவர்களுடன் பயிற்சியில் சிலமணிநேரங்கள் செலவழித்த அஜீத், அடுத்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவது குறித்தும் விவாதித்தாராம். அப்பிடியே ஒரு அட்மிஷன் போட்டு ஸ்டூடண்டா ஜாயின் பண்ணிருங்க தல.