'குறும்பு' படத்தின் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு, இயக்குனராக அறிமுகமானவர்,  விஷ்ணுவரதன். இந்த படத்தை தொடர்ந்து, 'அறிந்தும் அறியாமலும்' , 'பட்டியல்'  போன்ற படங்களை இயக்கினார்.

இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்றால், சூப்பர் ஸ்டார் நடித்து வெற்றி பெற்ற 'பில்லா' படத்தை, நடிகர் அஜித்தை வைத்து, '2007 ' ஆம் ஆண்டு ரீமேக் செய்த 'பில்லா 2 ' படம் தான்.இந்த படத்திற்கு பின், மீண்டும் அஜித்தை வைத்து 'ஆரம்பம்' படத்தை இயக்கினார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. கடைசியாக இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு 'யட்சன்' திரைப்படம் மட்டுமே வெளியானது.

5 வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வரும் விஷ்ணுவர்தன், தற்போது  ’Shershaah’ என்ற படத்தை இந்தியில் இயக்க உள்ளார். இந்த படம் கேப்டன் விக்ரம்பாத்ரா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பாலிவுட் திரையுலகில் முதல் முதலாக இயக்குனராக அறிமுகமாக உள்ள விஷ்ணுவர்தனுக்கு, தல அஜித் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஷ்ணுவர்தன் கூறியபோது..  ’நான் பாலிவுட்டில் முதல் முதலாக ஒரு படத்தை இயக்க இருக்கின்றேன் என்று, தெரிந்ததும், அஜித் தனக்கு போன் செய்து ’ஹிந்திக்கு நீங்கள் செல்வது கொஞ்சம் காலதாமதம் என்றாலும் நல்ல முடிவு என வாழ்த்தியதாக தெரிவித்துள்ளார். அஜித் மீது அதீத மரியாதை வைத்திருக்கிறேன் என்றும், எப்போதும் அவருடனான தன்னுடைய நட்பு தொடரும் என விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.