ajith vivegam punch dialogue leek
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மிகவும் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் 2 வாரத்தில் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அஜித் பிறந்த நாளில் 'விவேகம்' படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இருப்பினும் ஒரு அட்டகாசமான ஸ்டில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் 'விவேகம்' படத்தில் அஜித் பேசும் பஞ்ச் டயலாக் ஒன்று தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவிவருகிறது. அந்த பஞ்ச் டயலாக் இதுதான்:
'என்னை தோற்கடிக்கணும்ன்னு எல்லாரும் நினைக்கிறாங்க..நான் தோற்கணுமா இல்லையான்னு நான் தான் முடிவு செய்யணும்' என்பது தான் அந்த பஞ்ச் டயலாக்.
இதனை பார்த்த பலரும் இந்த டயலாக், செம மாஸ்ஸாக உள்ளது என்று பாராட்டி வருகின்றனர்.
