நான்காவது முறையாக தல  அஜித்துடன் கைகோர்த்துள்ள சிவா இறங்கி அடிச்சுருக்கார், அஜித் உடல்மொழி அபாரம், தீப்பிடிக்கும் வசனங்கள். தேனி மாவட்ட பெண்ணாக கொள்ளை அழகில் ஜொலிக்கும் நயன்தாரா, அவரிடம் காதலை சொல்லும் அஜித் காதல்மன்னன் இப்படி டிரெய்லர் முழுவதும் கொல மாஸ் லோட் பண்ணி வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில், 'விஸ்வாசம்' பட ட்ரெய்லர் வெளியான 12 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளையும், 25 நிமிடங்களில் 2 மில்லியன் பார்வைகளையும் , 8 நிமிடங்களில் 2 மில்லியன் லைக்ஸ் அள்ளி சாதனை புரிந்துள்ளது. இதனை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது சத்யஜோதி நிறுவனம்.

நேற்று முன்தினம் வெளியான, பொங்கலுக்கு வெளியாகும் ரஜினிகாந்தின் பேட்ட ட்ரெய்லர் வெளியான 40 நிமிடத்தில் அதை 10 லட்சம் பேர் பார்த்திருந்த பேட்ட சாதனையை விஸ்வாசம் ஒரே நாளில் முறியடித்துள்ளது.