அஜித்தின் படத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது அவர்களுக்கு ஒரு மைல் கல்லாக அமையும். அதுவும் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் என்றால் சொல்லவே வேண்டாம்.
அப்படி 2004ம் ஆண்டு அஜித் மற்றும் சினேகா நடித்து வெளிவந்த ஐனா படத்தில் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் பாபுராஜ்.
இவருக்கும் கேரள மாநிலம் இடுக்கி அருகே அடிமாலி என்ற இடத்தில் இருக்கும் மக்களுக்கும் தண்ணீர் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த பிரச்சனை முற்றியதில் சன்னி என்பவர் இன்று நடிகர் பாபுராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த நடிகர் பாபுராஜ் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை அவரது நிலை மோசமாகவே உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இவரது நிலை குறித்து அறிந்த மலையாள திரையுலகை சேர்ந்த பலர் அவரை தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
