இந்த வருடம், அஜித் - விஜய் நடித்து வரும் 'விசுவாசம்' மற்றும் 'விஜய்' நடித்து வரும் 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களுமே அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பலத்தை கொண்ட அஜித் - விஜய் இருவரின் படம் குறித்து எந்த தகவல் வந்தாலும், அதனை கொண்டாடும் ரசிகர்கள் தற்போது வெளியாகியுள்ள தகவலையும் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'விசுவாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்தியை முன்னிட்டு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய்யின் 'சர்கார்' படத்தின் டீசரும் அதே நாளில் வெளியாகும் என கூறப்படுவதால் அஜித் - விஜய் ஆகியோரின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

இதனால் இப்போதே ரசிகர்கள் இந்த நாளை கொண்டாட தயாராகி வருவதாக சமூக வளைத்ததில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.