பெரியார், மோடி பிறந்த நாளில்  அவர்களை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை. 

வாரத்தோட முதல் நாளை யாரோட கொண்டாடப் போறீங்க தளபதி, தல என ஒரு வாக்கெடுப்பை சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் நடத்தியது அதில் அஜித் 52 சதவிகிதமும், விஜய் 48 சதவிகித வாக்குகளையும் பெற்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனை கொண்டாடும் விதமாக #EmperorOfPollsTHALAFans என்கிற ஹேஸ்டாக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி முதலிடம் பிடிக்கச் சென்ய்தனர். ஆனால் விஜய் ரசிகள் #PaidAJITHmafiaExposed என்கிற ஹேஸ்டாக்கை உருவாக்கி கிண்டலடித்து வருகின்றனர். அதப்பதிவுகளில் அஜித் புகழை விரும்பாதவர் என வெளியில் கூறிக்கொள்கிறார். தன்னைப்பற்றி செய்தி பரப்ப பணம் கொடுத்து ஆட்களை வைத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

இன்று காலை முதலிடங்களில் இருந்த மோடி, பெரியார் பிறந்த நாள் ஹேஸ்டேக்குகள் #FatherOfTamilNation #HBDPERIYAR முதலிடத்தில் இருந்தன. அவற்றை ஓரம் கட்டி இந்த இரு ஹேஸ்டேக்குகளும் முதலித்தில் உள்ளன.