ரசிகர்கள் என்கிற போர்வையில் அவர்களது ஆதர்சன நாயகர்களை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதை ஏனோ இந்த மூளை இல்லாதவர்கள் உணர்வதில்லை. 

இன்னும் என்னென்ன அசிங்கங்களையெல்லாம் சமூக வலைதளப்பங்கங்களில் அரங்கேற்ற இருக்கிறார்களோ..? என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள். 

அத்தனை அழிச்சாட்டியம் செய்து வருகிறார்கள் அஜித், விஜய் ரசிகர்கள். எல்லை மீறிச்செல்லும் அவர்களின் சமூகவலைதள செயல்பாடுகள் வரம்பு மீறி போய்க்கொண்டிருக்கிறது. இவர்களெல்லாம் ரசிகர்களா? என முகம் சுழிக்க வைக்கிறது. மாறி மாறி அஜித்தையும், விஜயையும் நாறடித்து வருகிறார்கள். இப்போது அவர்கள் செய்துள்ள மோசமான செயல் வக்கிரத்தின் உச்சகட்டம்.

அதுவும் கேவலமான ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அஜித், விஜய்க்கு இடையே நல்ல நட்பும் ஒற்றுமையும் இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் காட்டுக்குரங்குகளாக மாறிமாறி தாக்கிக் கொள்கிறார்கள். ரசிகர்கள் என்கிற போர்வையில் அவர்களது ஆதர்சன நாயகர்களை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதை ஏனோ இந்த மூளை இல்லாதவர்கள் உணர்வதில்லை.

Scroll to load tweet…

அப்படி இப்போது அவர்கள் செய்த காரியம் சகித்துக் கொள்ளவே முடியாத ரகம். விஜய் ரசிகர்கள் #RemoveSareeofActorAJITH என்ற ஹேஸ்டேக்கில் அஜித்தை ட்ரோல் செய்கின்றனர்.அஜித் -விஜய் ரசிகர்கள் காட்டுக்குரங்குள்... குதர்க்கப்புத்தி கோமாளிகள்... மானத்தை வாங்கிய நடிகை..!

பதிலுக்கு அஜித் ரசிகர்கள் #RemoveBraOfActorVIJAYஎன்ற ஹேஸ்டேக்கில் விஜயை ட்ரோல் செய்கின்றனர். இதில் இன்னும் அதிர்ச்சிகரமான விசியம் என்னவென்றால் இந்த இரண்டு ஹேஸ்டேகிலும் லட்சத்திற்கும் அதிகமான டிவீட்கள் பதிவாகியுள்ளன. அதில் அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் மகாமெகா கேவலம். இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் நம்பர் ஒன் ட்ரெண்டாக அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. 

Scroll to load tweet…

அஜித், விஜயின் அரக்கத்தனமான ரசிகர்களின் கிறுக்குத் தனமான செயல்களால் தல, தளபதி இருவரும் தலைகுனியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடேய்... குதர்க்கப்புத்தி கோமாளிகளா... உங்கள் கிறுக்கத்தனத்தை பொறுக்க முடியாமல் நடிகை டாப்ஸி ’’என்ன நடக்கிறது இங்கே’’ என ட்விட்டெர் ட்ரெண்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கி இருக்கிறார். இனி உங்களுக்காக #RemovebrainofActorVIJAYFANS #RemovebrainofActorAJITHFANS என்கிற ஹேஷ்டேக் போட்டு உங்கள் மானத்தை வாங்கினாலும் திருந்த மாட்டீர்கள் என்றே தோன்றுகிறது.

Scroll to load tweet…