ட்விட்டரில் தரம் தாழ்ந்து எதிர்மறை பதிவுகளை பதிவிடும் விஜய், அஜித் ரசிகர்கள் இப்போதும் ஒரு கேவலமான செயலில் ஈடுபட்டு ட்விட்டர் பக்கத்தை கதறடித்து வருகின்றனர். 

 

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மக்கள் வீடுகளுக்குள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை பொழுதுபோக்கும் விதமாக தொலைக்காட்சிகள் நாள்தோறும் பல திரைப்படங்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் நடிகர் அஜித் - விஜய் நடித்த படங்கள் ஒளிபரப்பாகும் போதெல்லாம், அதை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

 

ட்ரெண்ட் செய்வது ஒருபுறம் இருந்தாலும், ஒருவர் மாறி ஒருவர் நடத்தும் அநாகரீக வார்த்தை யுத்தம் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இதை கவனித்த விஜய், அஜித் இருவரும் இவ்வாறான செயல்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கூறினாலும் ரசிகர்கள் நிறுத்தியபாடில்லை. இந்நிலையில் அஜித்திற்கு வரும் மே 1 ல் பிறந்த நாள் வருகிறது. விஜய்க்கு அதற்கு அடுத்தமாதமான ஜூன் 22 ல் பிறந்த நாள் வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டங்கள் வழக்கம் போல இருக்கும்.

 

இந்நிலையில் சமூகவலைதளமான டிவிட்டரில் மோசமான முறையில் #மே1அஜித்குபாடைகட்டு - #June22BlackdayForVijay என்கிற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதை ட்ரெண்டிங்கில் இடம் பெற செய்துவிட்டனர். இது சினிமா துறையினருக்கும், உண்மையான ரசிகர்களுக்கும், அவரிகளின் பால் அன்பு கொண்ட அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரு ஹேஷ்டேக்குகளுமே தவறான நோக்கம் கொண்டவை.