சிறிய ரக விமானங்களை உருவாக்கும் வேலைக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு மிக உற்சாகமாக துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து வந்த அஜீத் இந்த வார இறுதியில் கோவையில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ளவிருப்பதாக சிலர் டுமீல் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

‘நேர்கொண்ட பார்வை’ முடிந்து ரிலீஸுக்குத் தயாராக உள்ள நிலையில் அஜீத் மீண்டும் அதே தயாரிப்பாளர் போனிகபூருக்கும் அதே இயக்குநர் ஹெச்.வினோத்துக்கும் படம் நடித்துத்தரவிருப்பதை உறுதி செய்திருக்கிறார். ‘தல 60’என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியிலேயே துவங்கவிருப்பதையும் இன்று தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.

இந்நிலையில் எவ்வித ஊர்ஜிதமும் இல்லாத செய்தி ஒன்று இன்று காலைமுதல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வரும் வாரக் கடைசியில் கோவையில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜீத் கலந்துகொள்ளவிருக்கிறார் என்பதே அந்தச் செய்தி. அஜீத் படத்துக்கு எக்ஸ்ட்ரா விளம்பரங்களே தேவையில்லை என்னும் நிலையில், இதை ‘நேர்கொண்ட பார்வை’படத்துக்கான பப்ளிசிட்டி என்றும் எடுத்துக்கொள்ளமுடியவில்லை.