இம்மாத இறுதியில் துவங்கவிருக்கும் அஜீத்தின் அடுத்த படத்தில் அவர் பைக் ரேஸராக நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் நடமாடும் நிலையில், அவரது இளமையான தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரிலீஸான இரண்டே வாரங்களில் வெளிநாட்டு வசூலையும் சேர்த்து இப்படம் ரூ 200கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அற்விக்கப்பட்டபடி அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது. 

இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார். அதற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் வகையில், அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் இப்புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ’நேர்கொண்ட பார்வை’படத்தில் பணியாற்றிய முக்கிய டெக்னீஷியன்கள் அனைவரும் இப்படத்திலும் தொடர்கிறார்கள்.