நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி, நடிகை என்பது நம் அனைவருக்கும் தெரியும். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமான அவர், 2009ல் வெளியான ஓயே என்ற தெலுங்கு படம் மூலம் ஹிரோயினாக ப்ரமோஷன் ஆனார்.
தமிழில் விக்ரம்பிரபுக்கு ஜோடியாக வீரசிவாஜி படத்தில் நாயகியாக அறிமுகமான ஷாம்லியை, அதன்பின் தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளவே இல்லை. இதனை பொருட்படுத்தாத அவர், அஜித்தைப் போன்று பல துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஓவியராக ஷாம்லி புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக, பிரபல ஓவியர் ஏ.வி.இளங்கோவிடம் முறையாக ஓவியம் வரைய கற்றுக்கொண்ட அவர், சமீபகாலமாக ஓவியங்கள் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

கலை நுணுக்கத்துடன் அவர் வரைந்த ஓவியங்களை பலரும் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. நடிகை ஷாமிலி நடிப்பை கைவிட்டு முழுமுழுக்க ஓவியத் துறையில் இறங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது. எனினும், ஓவியத் துறையில் ஷாம்லி உச்சம் தொடுவார் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
