ajith sing a song in visuvaasam moive
4வது முறை
வீரம், விவேகம் ,வேதாளம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்துள்ளார் அஜித். படத்திற்கு விசுவாசம் என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
புது அப்டேட்
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.மேலும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது
இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் பற்றிய புது அப்டேட் வந்து தல ரசிகர்களை மகிழ்ச்சியில் திண்டாட வைத்திருக்கிறது.
பாடல்
இந்த படத்தில் முதல் முறையாக அஜித் ஒரு பாடலை பாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பெரும் யோசனைக்கு பின்னர் தல பாட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தலயின் இந்த புதிய முயற்சியால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
