ajith shalini marriage anniversary

தல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தில் இணைத்து நடித்த போது இருவருக்குள் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் பச்சை கொடி காட்டியதால் , திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது என்பது நாம் அறிந்தது தான்.

இவர்களுடைய திருமணத்திற்கு சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என பல முன்னனி நடிகர்கள் நேரில் சென்று வாழ்த்தினர்.

சினிமாத்துறையை சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்டால் விவாகரத்தில் தான் முடியும் என பலர் கூறி வரும் நிலையில், இந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கி ஒற்றுமையாகவும் பலருக்கு எடுத்துக்காட்டாகவும் 17 வருடங்களாக வாழ்த்து வருகின்றனர் அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதியினர்.

இன்று தங்களுடைய 17 வது திருமணம் நாளை கொண்டாடும் இவர்களுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். இவர்களுக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாகவும் இனிய திருமண வாழ்த்துகள்.