தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதாவது தான் எல்லோருக்கும் பிடிக்கும் படம் வரும். அந்த வகையில் விஸ்வாசம் அஜித் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி கோலிவுட் வரலாற்றில் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது.

கடந்த மாதம் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன விஸ்வாசம் சுமார் ரூ 170 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். இப்படம் கண்டிப்பாக அஜித்தின் திரைப்பயணத்திலேயே லாபம் கொடுத்த படம் என சொல்லலாம். 

Scroll to load tweet…

தமிழகத்தில் மட்டுமே இதுவரை ரூ 170 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம், குறிப்பாக பி,சி சென்டர்களில் அமோக வசூலாம். விஸ்வாசம் படம் வெளிவந்து 20 நாட்கள் கடந்தும் நேற்று வரை தமிழகத்தின் வசூல் கோடியில் தான் இருந்ததாம். இன்னும் வசூல் லட்சங்களுக்கு கூட குறையவில்லையாம், பாகுபலி-2விற்கு பிறகு இப்படி ஒரு சாதனையை விஸ்வாசம் தான் செய்துள்ளது என சொல்கிறார்கள்.

Scroll to load tweet…

கடந்த வாரம் சார்லி சாப்ளின் 2 படம் ரிலீஸ் ஆகியும் கூட விஸ்வாசம் படத்தோடு வெளியான பேட்ட படத்தை பெரும்பாலான இடத்தில் தூக்கிட்டே சார்லி சாப்ளின் 2 ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

Scroll to load tweet…

விஸ்வாசம் படம் ஓடும் தியேட்டரை பிடிக்கவில்லை என சொல்லலாம், அதேபோல இன்று ரிலீஸ் ஆன வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படம் ரிலீஸ் ஆனாலும் அஜித் படம் அவ்வளவாக தூக்கப்படவில்லை, காட்சிகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. மற்றபடி மிச்சம் சொச்சம் ஓடிக்கொண்டிருந்த பேட்ட , மற்றும் சார்லி சாப்ளின் 2 படங்களை மட்டுமே தூக்கிவிட்டு வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தை ரிலீஸ் செய்துள்ளார்களாம்.