‘விஸ்வாஸம்’ படத்தின் மொத்தக்கதையும் மதுரையைப் பின்னணியாகக்கொண்டது என்றாலும் ஒருநாள் கூட மதுரை வட்டாரங்களில் படப்பிடிப்பு நடக்காமல் மொத்தப்படமும் ஹைதராபாத்திலேயே நடத்தப்பட்டது. இப்படம் ஏற்கனவே இரண்டு ஷெட்யூல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேவிலும், லக்னோவிலுமாக நடந்து முடியவுள்ளது.

இதை ஒட்டி வரும் சனியன்று படப்பிடிப்பு குழுவினர் கிளம்ப, அஜீத் ஞாயிறன்று கிளம்பி, திங்கள் முதல் தொடர்ச்சியாக பத்துநாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

‘விஸ்வாஸம்’ படம் பற்றிய செய்திப் பஞ்சத்தில் அலைபவர்களுக்காக ஒரு தகவல்…

தொடர்ச்சியாக இயக்குநர் சிவாவுடன் மூன்று படங்கள் நடித்து முடித்த அஜித் அடுத்து அட்லீஸ்ட் ஒரு மூன்று படங்களாவது வேறு இயக்குநர்களுடன் பணிபுரிய விரும்புவதை வெளிப்படையாக சொல்லி, ‘சீக்கிரம் வேற யாருக்காவது கதை சொல்லி ‘விஸ்வாஸம்’ ரிலீஸுக்கு முந்தியே அடுத்த படத்தை அறிவிச்சுடுங்க பாஸ்’ என்கிறாராம்.

இதுவரை எடுத்தவை எடிட் செய்யப்பட்டு, அதற்கு டப்பிங்கும் பேச ஆரம்பித்துள்ள அஜீத் கண்டிப்பாக என்னோட அடுத்த படம் உங்க கூட இல்லை என்று அவசர அவசரமாக கழட்டிவிட காரணம் என்னவாக இருக்கும்?

இந்த செய்திக்கு அஞ்சவேண்டியவர் ’விஸ்வாஸம்’ படத்தின் விநியோகஸ்தரான நடிகை நயன்தாராதான்.