அஜித்தின் ரசிகர்களும்  விஜயின் விஜயின் ரசிகர்களும் பரஸ்பரம் கலாய்த்துக்கொண்டாலும் தலயும் தளபதியும் தனிப்பட்ட முறையில் ஒருவர் மீது ஒருவர் உயர்ந்த அபிப்ராயம் கொண்டவர்களே என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர் ஒருவர் விஜயின் நடனத்திறமை குறித்து என்ன கமெண்ட் அடித்தார் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

’சூது கவ்வும்’ படம் தொடங்கி அஜீத்தின் ‘விஸ்வாசம்’ உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆர்.ஜே. ரமேஷ் திலக். இவர் சமீபத்தில் 
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். விஜய் சாருடன்  ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை ஏனோ இதுவரை நிறைவேறவில்லை.

ஆனால் என்னைப்பொறுத்தவரை மனதளவில் அவர்கள் இருவரும் நண்பர்களாகவே உள்ளனர். நான் ஒன்றைக் கூறுகிறேன். ஆனால் நம்ப மாட்டீர்கள்.  'விஸ்வாசம்' ஷூட்டிங்கின் போது கேரவனில் நானும் அஜித் சாரும் அமர்ந்திருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜய் சாரின் பாட்டு ஓடியது. அதைப் பார்த்த அஜித் சார், விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக ஆடுகிறார் பாருங்கள்’என்று என்னிடம்  புகழ்ந்தார். ஒரு சக போட்டியாளர் குறித்து அவ்வளவு பெருந்தன்மையாகக் குறிப்பிட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது’ என்கிறார் ரமேஷ் திலக்.