சினிமா உலகம் எக்கச்சக்கமாய் மாறிவிட்டது. நல்ல படமாக இருந்தாலும் பத்துப் பதினைந்து நாள் தியேட்டரில் நின்றுவிட்டால் போதும் செமத்தியான வசூல் ஆகிவிடும் என்பதே தயாரிப்பாளர்களின் கணக்கு. ஆனால் ஜனவரி 10-ல் வெளியான விஸ்வாசம் 25 நாட்களை தொட்டும் இன்னமும் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

ஆனால் அஜித்தோடு சீன் பை சீன் போட்டிக்கு நின்ற பேட்டயும் ஓப்பனிங்கில் இருந்து மரணமாஸ் ஹிட்டுதான் என்றாலும் கூட  இருபது நாட்களுக்கு மேல் அந்தப் படத்தால் பெரிதாய் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. 


வசூலில் மட்டுமில்லை, வரவேற்பு, ஓட்டம் எல்லாவற்றிலும் அஜித்துதான் அடிச்சு தூக்கி இருக்கிறார்! என்று தல-க்கு சப்போர்ட்டாக சில தயாரிப்பாளர்கள் பேசியபோது, ரஜினி ஆதரவு தயாரிப்பாளர்கள் அதை எதிர்த்தனர். 

இந்நிலையில் கோயமுத்தூர் மண்டலத்தில் இரு படங்களும் ஓடும் தியேட்டர்கள் மற்றும் ஷோக்களின் எண்ணிக்கையை ஆதாரப்பூர்வமாக புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டி அதை நிரூபித்திருக்கிறது தல கோஷ்டி. பேட்ட படம் ஓடும் தியேட்டர்களின் எண்ணிக்கையை விட கணிசமான மடங்கு அதிகமாக விஸ்வாசம் ஓடிக்கொண்டிருப்பதும், மால்களில் ஷோக்கள் ரீதியாகவும் விஸ்வாசம் அதிகமாக ஓடிக் கொண்டிருப்பதும் நிரூபணமாகியிருக்கிறது. 

உதாரணத்துக்கு பத்து தியேட்டர்களில் பேட்ட ஓடினால் விஸ்வாசம் ஏறக்குறைய முப்பத்தைந்து தியேட்டர்களில் ஓடுகிறது! என்று நிரூபித்து ‘பேட்டயை பொட்டிக்குள் சுருள வைத்தது விஸ்வாசம்’ என்று கொளுத்திப் போட்டிருக்கிறார்களாம் எக்ஸ்ட்ரா வாலா வெடியை. 

இது ரஜினியின் காதுகளுக்கும் போக, வழக்கம்போல் வேகமாய் சிரித்தபடின் மகள் செளந்தர்யாவின் திருமண வேலைகளில் தன்னை பிஸியாக்கிக் கொண்டுவிட்டாராம். 
பரபரப்பில் கவலை மறந்து போகும் இல்லையா?!