‘5 மணி நேரம் இல்ல 5 நாள் காத்திருந்தாக் கூட  அஜீத் சார் கூட நீங்க போட்டோ எடுத்துக்க முடியாது. ஒழுங்கு மரியாதையா கிளம்பிப் போங்க’ என்று அஜீத்துக்கு துப்பாக்கி பயிற்சி கொடுக்கும் நிர்வாகிகள் ரசிகர்களை விரட்டி அடிக்கும் செய்தி வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் ‘பிங்க்’ ரீமேக்கின் இடைவெளியில் கிடைத்திருக்கும் ஓய்வில், எதிர்காலத்தில் யாரைச் சுட்டுத்தள்ளும் திட்டம் இருக்கிறதோ தெரியவில்லை, துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடத்துவங்கியிருக்கிறார் தல அஜீத். அவர் சப்பாத்தி சுட்டாலே இணையங்களில் வைரலாகும் நிலையில் துப்பாக்கியில் சுட்டால் என்ன ஆகும்? யெஸ் அதுவும் வைரல் ஆகவே அவர் பயிற்சி எடுக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு ரசிகர்கள் கூட ஆரம்பித்தனர்.

அவர்களில் சிலர் மணிக்கணக்கில் காத்திருந்து புகைப்படம் எடுக்க விரும்பிய நிலையில் துவக்கத்தில் ஓரிரு நாட்கள் அவர்களுக்கு லேசான தரிசனம் மட்டுமே தந்து கையெடுத்துக்கும்பிட்டு விட்டுத் திரும்பிய அஜீத், தற்போது சுத்தமாக எட்டிக்கூட பார்ப்பதில்லையாம். அவருக்கு பயிற்சி கொடுக்கும் நிர்வாகிகள் மட்டும் அவ்வப்போது எட்டிப்பார்த்து ‘எத்தனை மணி நேரம் காத்திருந்தாலும் அஜீத் சார் உங்க கூட போட்டோ எடுத்துக்க மாட்டார். அவருடைய பயிற்சியை டிஸ்டர்ப் பண்ணாதீங்க’ என்று விரட்டி விடுகிறார்களாம்.

இச்செய்தியை வலைதளங்களில் பதிவிட்டு புலம்பிவரும் ரசிகர்கள்...Tamil Censor @TamilCensor #Ajith refuse to take photo with fans who waited for him for more than 5 hours.. Dear Ajith more of you are in this position it’s because of your fans.. What a Shameful Attitude again..ரசிகர்கள் நாங்க இல்லாமயா நீங்க இவ்வளவு உசரத்துக்கு வந்தீங்க?’ என்று கேட்கிறார்கள்.