ரசிகர்

தல அஜித்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அஜித் ஒருவரின் தீவிர ரசிகர்.அவர் வேறு யாருமல்ல.மறைந்த நடிகை ஸ்ரீதேவிதான்.

கெஸ்ட் ரோல்

இதனால் ஸ்ரீதேவி சோலோ ஹீரோயினாக கலக்கிய 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார். மேலும் அஜித்தும், ஷாலினியும் வாரத்திற்கு ஒரு முறையாவது ஸ்ரீதேவியிடம் போனில் பேசி விடுவார்கள்.

மரணம்

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக துபாயிற்கு சென்றிருந்தார்.திருமணம் முடிந்து துபாயில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்.அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த செய்தி அறிந்ததும் அஜித் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்.

அஞ்சலி

இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஷாலினி நேற்றே மும்பை சென்று விட்டார்.அஜித் செல்வாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.ஆனால் கண்டிப்பாக செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.