அஜித் நடித்த முதல்படம் அமராவதி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

முதல் படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவரது இரண்டாவது படத்திற்கு தான் சிபாரிசு செய்ததாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சாக்லேட் பாய் மாதிரி இல்லாமல் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்றும் அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தன்னிடம் கேட்டதாகவும்.

அவர் அப்படி கூறியவுடன் தனக்கு உடனே ஞாபகம் வந்தது அஜித் தான் என்றும் நான் கூறியவுடன் உடனே அஜித் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் எஸ்பிபி கூறியுள்ளார்.

1993-ல் தெலுங்கில் அஜித் நடித்த முதல் படமான இந்த படம் பின்னர் தமிழில் 1997ஆம் ஆண்டு 'காதல் புத்தகம்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.