சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பீச் ஒன்றில் தனது மகன் ஆத்விக் மற்றும் காதல் மனைவி ஷாலினியோடு, அடுத்த படத்துக்கான இளமையான தோற்றத்தோடு தல’ அஜீத் செம ஜாலியாக பொழுதுபோக்கும் புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இன்னும் பெயரிடப்படாத ‘தல 60’படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில் துப்பாக்கி சுடும் போட்டிகளின் இரண்டு சுற்றுகளில் கலந்துவிட்டு வந்த அஜீத், தற்போது தனது எடையைக் குறைப்பதற்காக தினமும் 6 மணி நேரம் ஜிம்மில் தீவிர பயிற்சி எடுப்பதாகக் கூறப்படுகிறது. பைக் ரேஸராக அடுத்து அவர் நடிக்கவிருக்கும் அப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருப்பதாலேயே தொடர்ந்த இந்த ஜிம் பயிற்சிகள் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்துக்காக சமீபத்தில் வெளிநாடு சென்று தனது சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தை இளமையாக மாற்றிய அஜீத் விமான நிலையத்தில் திரும்பியப்போது அநேக ரசிகர்களுடன் விரும்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதோடு தானே சில செல்ஃபிகளும் எடுத்துக்கொண்டார். அப்படங்கள் இன்றுவரை வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், நேற்று முன் தினம் தனது மகன் ஆத்விக் மனைவி ஷாலினி ஆகியோருடன் கிழக்குக் கடற்கரைச் சாலையின் பீச் ஓரத்தில் மிகவும் சுவாரசியமாக அவர் மகனுடன் உரையாடிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது.