Asianet News TamilAsianet News Tamil

வைரலாகும் தல அஜித்தின் புது கெட்டப்!... இந்திய அளவில் டிரெண்டிங் செய்து தல ரசிகர்கள் கொண்டாட்டம்!

'நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றிக்குப்பிறகு, மீண்டும் தல அஜித் - இயக்குநர் ஹெச்.வினோத் - தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவாகும் படம் 'வலிமை'. ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா என 'நேர்கொண்ட பார்வை' கூட்டணியே இந்தப் படத்திலும் தொடர்கிறது. 

ajith  new getup in valaimai
Author
Chennai, First Published Nov 21, 2019, 8:34 AM IST

கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட 'வலிமை' படத்தின் ஷுட்டிங், டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டருக்காக அஜித் தன்னை தயார்படுத்தி வருவதால்தான் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூர் கூறியிருந்தார்.

ajith  new getup in valaimai
இந்த நிலையில், புதிய கெட்டப்புடன் அஜித் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதலத்தில் வைரலாகி வருகிறது. வேதாளம் ஹேர் ஸ்டைல், கூலிங் கிளாஸ், ஷார்ப் மீசையுடன்  செம ஸ்டைலாக இருக்கும் அஜித்தின் புதிய கெட்டப், ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது. 

ajith  new getup in valaimai

அத்துடன், வலிமை ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித்தின் புது கெட்டப் புகைப்படத்தை பகிர்ந்து இந்திய அளவில் டிரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர் தல ரசிகர்கள். 

ajith  new getup in valaimai
இதனிடையே, கார் சேசிங் காட்சிகளை பிரமாண்டமாக அமைத்துக் கொடுக்கும் ஹாலிவுட் கலைஞர்களில் ஒருவரான ஹென் கொலின்ஸ் என்பவரை 'வலிமை' படத்திற்காக தமிழகத்துக்கு அழைத்து வர படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹென் கொலின்ஸ் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சண்டைக் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சியை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios