ajith new getup for veveham movie

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


இந்நிலையில் புதிய புகைப்படம் ஒன்று சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகிறது. தற்போது பல்கேரியாவில் நடந்து வரும் படப்பிடிப்பில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் அஜித் பணி சூழ்ந்த இடத்தில் துப்பாக்கி ஏந்தியபடி உள்ளார். ஜேம்ஸ் பாண்ட் போல சர்வதேச அளவில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்பை பற்றி விசாரிக்கும் போலீசாக அஜித் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில் இந்த புகைப்படம் உறுதி செய்துள்ளது.