2002ம் ஆண்டு தளபதி விஜய்  மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான திரைப்படம் "தமிழன்".  தளபதி விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியப்படமான இதை இயக்குநர் மஜித் இயக்கியிருந்தார். முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ராவிற்கும் இது தான் முதல் படம். இசையமைப்பாளர் டி.இமான் அறிமுகமானதும் இந்த படத்தில் தான். கடைசியாக சதா நடிப்பில் "டார்ச்லைட்" என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இயக்குநர் மஜித்திற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: அதிரடி முடிவெடுத்த த்ரிஷா... ரசிகர்களுக்கு இப்படியொரு அதிர்ச்சி கொடுக்க காரணம் இதுவா?

தொடர் சிகிச்சையில் இருந்த மஜித்திடம் மருத்துவமனை நிர்வாகம் முதலில் 2 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். அதை நம்பியே இயக்குநரை அந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்த மஜித்தை டிஸ்சார்ஜ் செய்யும் நாளான்று முதலில் 4 லட்சம் ரூபாய் கட்ட சொல்லியுள்ளனர். “முதலில் ரூ.2.80 லட்சம் தானே கட்ட சொன்னீங்க இப்ப என்ன டபுளா கேட்குறீங்க” என உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதனால் மருத்துவமனை நிர்வாகம் பில் தொகையாக மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வந்துள்ளதாகவும், அதை முழுசா கட்டினால் மட்டுமே டிஸ்சார்ஜ் என்றும் கறாராக தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க:  நடிகர் சுஷாந்த் தற்கொலையில் அதிரடி திருப்பம்: சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு...!

திடீரென பில் தொகை இருமடங்காக அதிகரித்ததால் பணத்தை கட்ட முடியாமல் இயக்குநர் மஜித் திண்டாடியுள்ளனர். இதைக்கேள்விப்பட்ட கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ் மருத்துவமனை பில்லைக் கட்டி, மஜித்தை டிஸ்சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். தல அஜித்தின் விஸ்வாசம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அறம், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்த கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷின் நல்ல மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.