தல அஜீத் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வேதாளம், வீரம், விவேகம் என வெற்றிப்படங்களின் வரிசையில் தற்போது மீண்டும் நடித்து வரும் படம் தான் விஸ்வாசம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிய கொஞ்சம் நாட்களிலேயே ஸ்ரைக் உட்பட்ட சில காரணங்களால் தடையை சந்தித்தது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. 

படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக முன்னரே குறித்த தேதிக்குள் இந்த படத்தினை முடிப்பதில் பல சிரமங்கள் உருவாகின. இது போன்ற செய்திகளால் வருத்தத்தில் இருந்த தல ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில், விஸ்வாசம் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கிறது என்ற அறிவிப்பு வந்தது. தொடர்ந்து சமீபகாலமாக விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீசாகாது என்பது போன்ற செய்திகள் வந்து கொண்டிருந்தன.

பொங்கல் அன்று ரிலீசாகவிருக்கும் விசுவாசம் படத்தை திருவிழாவாகவே கொண்டாட முடிவு செய்திருந்த தலா ரசிகர்களுக்கு இது போன்ற செய்திகள் கூடுதல் வருத்தத்தை அளித்திருந்தது ஆனால் சமீபத்தில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் வெற்றி வெளியிட்டிருக்கும் ட்வீட் ஒன்று விஸ்வாசம் படம் பொங்கலுக்கு தான் ரிலீசாகிறது என்பதை உறுதி செய்திருக்கிறது.

அஜீத் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் இருக்கும் அந்த போட்டொவில், அவருடன் வெற்றி மற்றும் சிவா ஆகியோர் இருக்கின்றனர். அந்த ட்வீட்டில்” #தமிழர்திருநாள்வாழ்த்துக்கள் #விஸ்வாசம்திருவிழா #ViswasamThiruvizha” என்று பதிவிட்டிருக்கிறார் வெற்றி. இதனால் தமிழர் திருநாளான பொங்கல் அன்று விஸ்வாசம் திரைப்படம் கோலாகலமாக ரிலீசாகவிருப்பது உறுதி ஆகி இருக்கிறது.