தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள். 

நார்மலாகவே அடுத்து வீட்டு பிரச்சனைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் எல்லா மனிதருக்கும் அதிகம் தானே. அதை தான் கொஞ்சம் மார்டனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறார்கள். 

தெலுங்கில் ஆரம்பிச்சிட்டாங்களே தமிழில் இன்னும் எப்போ தொடங்கும் என தெரியவில்லையே என இங்குள்ள பிக்பாஸ் ரசிகர்கள் வாய்விட்டு வறுத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4-யை தொகுத்து வழங்க உள்ள கமல் ஹாசனின் கெட்டப்பு இதுவா? என்று புகைப்படங்கள் கூட தாறுமாறு வைரலாகின. அதில் முரட்டு மீசை, தாடியுடன் செம்ம ஸ்டைலாக இருந்த கமல் போட்டோவை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

இப்போது அந்த கெட்டப்பில் தான் கமல் ஹாசன் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் பிக்பாஸ் சீசன் 4 தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை புரோமோ வீடியோவுடன் வெளியிட்டிருக்கிறது விஜய் டி.வி. அதில் லாக்டவுனால் வேலை இல்லாமல் இருப்பவர்களை உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலை பயன்படுத்தி வேலைக்கு செல்லுங்கள் என கூறியுள்ள கமல்.. இதோ நான் வேலைக்கு வந்துட்டேன்... வேலையை  ஆரம்பிக்கலாமா? என்ன வேலை என முடிக்க... அசத்தலாக வருகிறது பிக்பாஸ் புரோமோ...

பிக்பாஸ் ப்ரோமோ வெளியானதில் இருந்து, பிக்பாஸ் சீசன் 4... நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் யார் யார்? என்பது குறித்து, தற்போது ஒரு விவாதம் சென்று கொண்டிருக்கிறது. அதன் படி தற்போது வெளியாகியுள்ளது தகவலின் படி, ரம்யா பாண்டியன், விஜய் டிவி புகழ், ஷிவானி நாராயணன், சூர்யா தேவி உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்ட் வர, கண் கூசும் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு வந்த, அஜித்தின் 'வில்லன்' பட நாயகி, கிரண் ரத்தோர் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.