தல அஜித்தின் ரசிகர்கள் தற்போது 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்த திரைப்படம், பாலிவுட் திரையுலகில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக் ஆக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அஜித் வக்கீல் கெட்டப்பில் கலக்கியிருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து, தல அஜித் 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கி வரும் இயக்குனர் எச். வினோத் இயக்க உள்ளார். அதேபோல் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் இந்த படத்தின் படப்பிடிப்பு, இறுதி வாரத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ  ஆரம்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தை பற்றி, கூறியுள்ள போனிகபூர் இப்படத்தில் அஜித்தின் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்தையும் பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். 

தலயின் ஒரு படம் ரிலீஸ் ரிலீஸ் ஆன உடனேயே மற்றொரு படம் ஆரம்பமாக உள்ளது அஜித் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.