'நேர்கொண்ட பார்வை' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தல அஜித் - இயக்குநர் ஹெச்.வினோத் - தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் உருவாகும் படம் 'வலிமை'. பக்கா ஆக்ஷ்ன் மற்றும் காப் ஸ்டோரியுடன் தயாராகும் இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கிறார். 

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, நிர்வ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.கடந்த அக்டோபர் மாதமே பூஜை போடப்பட்ட 'வலிமை' படத்தின் ஷுட்டிங், கடந்த வாரம்தான் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 'நேர்கொண்ட பார்வை' படம் ரீமேக் கதை என்பதால், தனது சொந்தக் கதையுடன் உருவாகும் 'வலிமை' படத்தை ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு பல ஆக்ஷன் காட்சிகளுடன் மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் ஹெச்.வினோத்.

இதனால், காட்சிகள் மற்றும் அஜித்தின் லுக் லீக் ஆவதைத் தடுக்க, படப்பிடிப்பு தளத்துக்குள் செல்ஃபோன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாம்.
ஒருபக்கம் வலிமை ஷுட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தாலும், மறுபக்கம் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது இதுவரை உறுதியாகவில்லை. 

தற்போதைய தகவலின்படி, ஹீரோயின் ரேஸில் பாலிவுட் நடிகைகள் யாமி கவுதம் மற்றும் இலியானா ஆகியோர் போட்டிப்போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், யாமி கவுதம் முன்னணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில், வலிமை படத்தின் ஹீரோயின் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.