பொங்கல் வெளியீட்டை உறுதி செய்துள்ளது ‘விஸ்வாசம்’ படக்குழு. இதனால் முதன்முறையாக நேரடி வியாபாரப் போட்டியில் ரஜினி - அஜித் படங்கள் களமிறங்கியுள்ளன. அஜித் பட வெளியீட்டால் பேட்ட டீம் பீதியில் இருக்கிறதாம்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. இப்படம் சில மாதங்களுக்கு முன்பு தனது பொங்கல் வெளியீட்டை உறுதி செய்த நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’  படத்தை ‘பொங்கல் ரிலீசாகும்  என அறிவிப்பு வெளியானது. இதனால்,  கடுப்பான ‘விஸ்வாசம்’ டீம்  ஷாக் ஆனது.

ஆனால், பயம்  இல்லை ஏன் என்றால் ரஜினி படத்தை விட அஜித் படத்துக்கே மாஸ் ஓப்பனிங் இருக்கும் என்பது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே தெரிந்த ஒன்று. அதான் ரஜினியை பற்றி கவலைப்படாத தயாரிப்பு நிறுவனம் நேற்று முன்தினமே மோஷன் போஸ்டர் மூலமாக பொங்கல் வெளியீட்டை உறுதிசெய்தது. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, யாரும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் மோஷன் போஸ்டர் வெளியாகி எல்லோருக்கும் அதிர்ச்சியை தந்தது. இந்த போஸ்டர் தற்போது 18 மணி நேரத்திற்கும் மேலாக டிரண்டிங்கில் உள்ளது. மேலும் யூடியூப் டிரண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ள ‘விஸ்வாசம்‘ மோஷன் போஸ்டர்,  டிரெண்டிங்கில் இருந்த 2.0  சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது. அதுமட்டுமல்ல  ரஜினியின் ‘பேட்ட’ மோஷன் போஸ்டர் சாதனையை ஒருமணி நேரத்தில் தகர்த்துள்ளது. 

தீபாவளிக்கு சர்க்காரை ரிலீஸ் செய்து வசூல் சாதனை படைத்ததைப்போல வெறும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்தை சோலோவாக வெளியிடலாம் ரஜினியை கண்டு மற்ற நடிகரின் படங்கள் தள்ளிப்போகும் என பட தயாரிப்பு நிறுவனம் பிளான் போட்டது. ஆனால் விசுவாசம் டீமோ அஜித் ரசிகர் சொல்வதைப்போல யார் படம் வந்தாலும் வரட்டும் எங்க தல படம் தான் மிரட்டும் என ரேஸ் களத்தில் குதித்துள்ளது. அஜித் படம் வெளியிட்டு அறிவிப்பு மட்டுமல்ல அந்த படத்தின் மோஷன் போஸ்டர் சாதனையும் பேட்ட படக்குழுவை பேதி புடுங்க வைத்துள்ளது.

மேலும்,  முதன்முறையாக ரஜினி மற்றும் அஜித் படங்கள் நேரடியாக மோதவுள்ளன. இப்போதைக்கு இரண்டுமே பின்வாங்கவில்லை. அஜித் படத்துக்கு முதல் நாள் ஓப்பனிங் பிரமாண்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ரஜினி படத்துடன் வரும்போது அந்த ஓப்பனிங் கொஞ்சம் குறையலாம் ஆனால் பேட்ட படத்தைவிட கூடுதல் வசூலை அள்ளும் என்பதில் சந்தேகமில்லை தியேட்டர் உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.