ஒரிஜினலை விட டூப்ளிகேட்டுகளுக்கு மவுசு அதிகரித்துவரும் நிலையில், ’பிகில்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்து தொடர்ந்து டுவிட்டரில் மீம்ஸ் உருவாக்கப்பட்டு டிரெண்டாகி வருகிறது. இதில், வடிவேலு, அஜித், ரஜினிகாந்த், பரத், முக ஸ்டாலின் ஆகியோரைக் கொண்டு மீம்ஸ் உருவாக்கப்படு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், தேவர் மகன் படத்தின் போஸ்டரைப் போன்று பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது என்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அட்லி இயக்கி வரும் படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், விஜய்க்கு என்று உருவாக்கப்பட்ட இந்த போஸ்டரில் தல, தளபதி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மீம்ஸ் போடப்பட்டுள்ளது. இதில், அப்பா விஜய்க்குப் பதிலாக தல அஜித் இருப்பது போன்றும், அஜித்துக்கு அருகில் விஜய் இருப்பது போன்றும் இந்தப் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. உண்மையில், இந்தப் போஸ்டர் விஜய்க்குப் பதிலாக அஜித்திற்கு தான் கச்சிதமாக பொருந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தளபதி விஜய்யின் 46ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட இரண்டாவது லுக் போஸ்டரையும் விஜய் ரசிகர்கள் விடிய விடியக் காத்திருந்து ட்ரெண்டிங் செய்தனர்.

இப்படத்தில் விஜய் உடன் இணைந்து நயன்தாரா, விவேக், கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷரூப், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா போலம்மா, ராஜ்குமார், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. அதே தேதியில் ரஜினி, முருகதாஸ் காம்பினேஷனின் ‘தர்பார்’படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.