ரஜினி - கமல் போட்டிக்கு சற்றும் குறைவில்லாதது அஜித் - விஜய் இருவருக்கும் இடையில் நடக்கும் பிஸ்னஸ் ரேஸ். சொல்லப்போனால் பேட்ட ரஜினியை அடிச்சு தூக்கியதில் சூப்பர் ஸ்டாரையும் மிஞ்சிய இடத்தில்தான் இருக்கிறார் தல. 

கமல் தன் ஒவ்வொரு படத்துக்கும் கெட் - அப்களை மாற்றுவதில் மிக தெளிவாய் இருப்பார். அவருடைய பட ஸ்டில்களை எடுத்துப் போட்டால் இது எந்தப்படத்தின் தோற்றம்? என்று தெளிவாய் ரசிகனால் சொல்லிவிட முடியும். ஆனால் ரஜினி மாஸ் காட்டுவாரே தவிர கெட்- அப் விஷயத்தில் கவலைப்பட மாட்டார். அஜித் - விஜய் தலைமுறை போட்டியை பொறுத்தவரையில் விஜய் தன் கெட் - அப்பை மாற்றுவதில் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை.

 

உதாரணத்துக்கு ‘துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல்’ இந்த நான்கு படத்தையும் எடுத்துக் கொண்டால்...வெளிப்படையான வித்தியாசம் எதுவுமே இருக்காது. ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் சமீக காலத்தில் மங்காத்தாவில் சால்ட் அண்டு பெப்பர் ஹேர் ஸ்டைல் மற்றும் சற்றே ட்ரிம்டு தாடி என்று இருந்தார். வீரம் படத்தில் டைட்டாக ஏற்றி சீவிய தலை அண்டு தாடி மற்றும் இடைவேளைக்குப் பின் மீசைக்கு டை அடித்து வித்தியாசம் காட்டினார். வேதாளத்தில் சொல்லவே வேண்டாம் பக்கா லோக்கல் ரவுடியாக லேசாய் முடி வளர்ந்த மொட்டை தலை கெட் - அப் ஒன்றும் அதன் பின் மழுமழு ஷேவிங் முகமுமாய் இருந்தார்.  

வேதாளம் படத்தின் செகண்ட் ஹாஃப் லுக்கில் சின்ன மாற்றம் செய்யப்பட்டதுதான் விவேகம் லுக். ஆனாலும் தலைமுடி என்னவோ முழுவதுமே வெளுத்த நிலையில் டைட்டாக சைடில் கட் செய்து மிலிட்டரி லுக்கில் முடியையும் ஏற்றி, உடம்பையும் தாறுமாறாக ஏற்றியிருந்தார். சமீபத்தில் விஸ்வாசத்திலோ முகம் மறைக்கும் முரட்டு மீச, வெளுப்பு ஹேர்ஸ்டைல், வெளுப்பு தாடி என்று நடுத்தர வயதை சற்றே கடந்த மனிதராக டோட்டல் வித்தியாசம் காட்டியிருந்தார். வீரம் லுக் ரிப்பீட் ஆகிவிட கூடாது என்பதற்காக மீசையை ரொம்பவே பெருசாக்கி பார்த்துப் பார்த்து வித்தியாசம் காட்டியிருந்தார் தல. 

பொதுவாக ஒரு படத்தை முடித்த பின், அடுத்த படத்துக்கு பெரிய இடைவெளி விடும் அஜித், விஸ்வாசம் தந்த தாறுமாறான ஹிட்டினால் உடனடியாக அடுத்த படத்தை துவக்கிவிட்டார். விநோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில், இந்தியின் ‘பிங்க்’ பட ரீமேக்கில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பக்கத்து ஷெட்டில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ஷூட் போய்க் கொண்டிருப்பதை கேள்விப்பட்டு அங்கு வந்து, டைரக்டர் பாசிலை சந்தித்து பேசியிருக்கிறார் அஜித். அந்த போட்டோ இப்போது வைரலாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக அஜித்தின் லேட்டஸ்ட் லுக் ஏகமாக பேசப்படுகிறது. அதாவது பிங்க் ரீமேக்கின் கதைப்படி நடுத்தர வயதை தொட்டு கடக்கும் சீனியர் வழக்கறிஞர் வேடம் அஜித்துக்கு.  அவர் கெட் - அப் எப்படி இருக்கிறதென்றால்...விஸ்வாசம் கெட் - அப் தலைமுடியை விட சற்று அதிகமாக முடி வளர்த்து, தாடியும் விட்டிருக்கிறார்.

 

மீசையின் அடர்த்தி வீரம் படம் போல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தலைமுடி, தாடி ரெண்டுமே வெள்ளையாக இருக்க, மீசைக்கு மட்டும் டை செய்து கறுப்பாக்கியுள்ளனர். மோகன்லால் செட்டுக்கு தல வந்த விஷயம் ஏக பரபரப்பாகி நிற்க, அந்த போட்டோவின் மூலம் தல யின் புதிய கெட் - அப்பை ஸ்மெல் செய்துவிட்ட குஷியில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அதேவேளையில் அஜித்தின் புது படக்குழுவோ...’தல கெட் - அப் வெளியே தெரிஞ்சிடுச்சே!ன்னு குஷியாகாதீங்க. இயக்குநர் அதை மாற்றி, பட ரிலீஸில் புது சர்ப்பரைஸ் கொடுத்தாலும் கொடுப்பார்.’ என்று புதிர் போடுகிறார்கள். இஞ்சாருடா...தல! எப்படி இருந்தாலும் மரண மாஸுக்கும் தாண்டின மாஸ்தான்.