உலகில் உள்ள தானங்களில் சிறந்த தானம், கண் தானம், ரத்த தானம், அன்னதானம் என சிலவற்றை நாம் கூறி வருகிறோம். குறிப்பாக ஒருவருக்கு பார்வை கிடைக்க உதவி செய்வது, இருளில் சூழ்ந்திருந்த அவர்களுடைய பார்வையை, மீண்டும் இந்த உலகத்தை வெளிச்சமாக காட்டுபவர், அந்த கடவுளுக்கே நிகர் என கூறலாம்.

அந்த வகையில், தற்போது வரை... 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார் நடிகர் அஜித். ஆனால் ஒரு போதும் அவர் இதுகுறித்து எந்த தகவலையும் வெளியில் கூறியதே இல்லை. இது அவரின் பெருந்தன்மை என்றே கூறலாம்.

இந்த தகவலை எதேர்சையாக கண் மருத்துவராக உள்ள பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய்சங்கர், நடிகர் ராதாரவியை சந்தித்த போது அதனை வெளிப்படையாக கூறி அனைவருக்கும் தெரியப்படுத்தினர் .

இதுகுறித்து ரதரவியிடம் கேட்ட போது, அஜித் தொடர்ந்து பல ஏழை எளியவர்கள் கண் சிகிச்சைக்காக பண உதவி செய்து வருவதாகவும். ஆனால் இதனை யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். கடந்த ஆண்டு வரை அஜித் 5000 பேர் கண் பார்வை பெற உதவியிருந்தார். தற்போது அது 8000 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற செயல்கள் மூலம்,   நல்ல மனம் கொண்ட சிறந்த நடிகர் என்பதை தாண்டி, உயர்ந்த மனிதர்  என தொடர்ந்து நிரூபித்து வருகிறார் தல அஜித், அவரால் பார்வை பெற்ற மனிதர்களும் இன்று அவருக்கு மனதார பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.