சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க உள்ளது. படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவிருக்கும் இப்படம் குறித்த அப்டேட்ஸ் அவ்வப்போது வெளியிடப்படுகிறது. இந்நிலையில், அஜீத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித் சென்னையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகிறார். படத்தில் சண்டை காட்சிகள் நிஜமாக தோற்றமளிக்க அஜித் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஸ்வாசம் படப்பிடிப்புக்காக வடசென்னையில் பிரம்மாண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதியில் படபிடிப்பு தொடங்கவிருக்கிறது. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து 4 மாதங்களில் படப்பிடிப்பை நிறைவுசெய்யவுள்ளதாகவும, திரைப்படத்தை இவ்வருடம் தீபாவளிக்கு வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு செய்தி கசிந்துள்ளது. மேலும், படத்தில் அர்ஜுனை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 'விசுவாசம்' பேய் படமாக உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடிக்கவுள்ள முதல் பேய் படம் என்று சமூக வலைதளத்தில் அனைவரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். "உறுதியாக 'விசுவாசம்' பேய் படம் அல்ல. குடும்பப் பின்னணியில் உருவாகும் கமர்ஷியல் படமாகும். தனது கதாபாத்திரத்திற்காக அஜித், துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்" என படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முதன் முறையாக அஜித் படத்திற்கு இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2018 தீபாவளிக்கு 'விசுவாசம்' வெளியாகிறது.