நடிகர் அஜித்துக்கு எந்த அளவிற்கு திரையுலகின் வெளியில் ரசிகர்கள் உள்ளார்களோ, அதே போல் திரைத்துறையில் நடித்து வரும் பல நடிகர்களும் அவருடைய ரசிகர்கள் தான். இதனை முன்னணி நடிகர்கள் கூட தானாக முன் வந்து ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சீமராஜா பட புரொமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து நடித்து வரும் அனுபவம் குறித்தும், வேதாளம்  படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் பற்றி பேசியிருந்தார் நடிகர் சூரி. 

அப்போது தான் அஜித்-விஜய் என இருவருடனும் நடித்துவிட்டேன். இருவருடன் நடித்த அனுபவமும் மறக்க முடியாதது. ஆனால் தல மட்டும் தனக்கு  ஒரு அட்வைஸ் கொடுத்தார்.

வருங்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறி நடியுங்கள், ஸ்டைலை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் கடைசிவரை உங்களின் இந்த குணம், எதார்த்தம் எப்போதும் போக கூடாது, அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றாராம்.