அஜித் சிறுத்தை சிவா மூன்றாவது முறையாக இணைத்து தற்போது வெளிவர தயாராக இருக்கும் படம் விவேகம். இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தில் தலைப்பு நேற்று வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

இதில் தோன்றும் அஜித்தின் உடலமைப்பு பற்றித்தான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டொபிக்காக உள்ளது. மேலும் விவேகம் என்னும் டைட்டில் வித்தியாசமாக 7 செக்மண்ட் டிஸ்பிளே முறையில் எழுதப்பட்டாலும் அதில் 9500912610 என்ற எண்ணை குறிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற மஸ்ஸனா உடலமைப்பை கொண்டுவர அஜித் தொடர்ந்து 7 மாதங்களாக 5 முதல் 6 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை உடல்எடையை குறைத்துள்ளாராம். அதுக்கேற்ற போல் கடும் டயட் கடைபிடித்துள்ளார்.