ajith friend car racer ashwin death

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸிலும் ஆர்வம் உள்ளவர். ஒரு காலகட்டத்தில் கார் ரேஸ் மட்டும் தன் வாழ்க்கை என இருந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் அவர் கார் ரேஸில் இருந்த போது அவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் அஸ்வின் சுந்தர்.

அவர் நேற்று தன் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்க்கு BMW z 4 ரக காரில் வந்தபோது அவரது கார் கண்ட்ரோல் மீறி மரத்தில் மிக வேகமாக மோதி தீ பற்றி எரிய தொடங்கியது.

கார் உள்ளே இருந்த அஸ்வின் மற்றும் அவருடைய மனைவி நிவேதிதா இருவருமே நெருப்பில் கருகி உயிர் இழந்தனர். அவர்களை காப்பாற்ற அருகில் இருந்தவர்கள் சென்றபோது, கார் வெடித்து சிதறியதால் முடியாமல் போனது.

மேலும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது, இன்று இலங்கை செல்வதாக அவர்கள் திட்டம் வைத்திருந்ததாக அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.