இது அஜித்தா....!!! என அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது அஜித் தற்போது நடித்து வரும் விவேகம் படத்தின் பஸ்ட்லுக்.

இந்த அளவிற்கு அஜித் உடலை மாற்றி இருக்கிறார் உடல் பயிற்சியாளர் யூசூப். இது குறித்து அவரே தனது சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில் 'விவேகம்' படத்தில் அஜித் ஒரு சர்வதேச போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதால் அவரது உடல் எடையை முற்றிலும் மாற்றும் பொறுப்பை இயக்குனர் சிறுத்தை சிவா தன்னிடம் ஒப்படைத்தார். 

மேலும் இது தன்னால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒரு விஷயமல்ல என்றும் அஜித்தின் தீவிரமான முயற்சி, அஜித் கொடுத்த அபாரமான ஒத்துழைப்பின் அடையாளமே இன்று நீங்கள் பார்க்கும் அட்டகாசமான அஜித்தின் 'விவேகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் தோற்றம் என்று கூறியுள்ளார் .

 அதே போல அஜித்தின் உடல்தகுதி மாற்றும் பயணத்தில் நானும் உடன் இருந்தேன் என்று கூறுவதில் தனக்கு பெருமை என்றும் . 'விவேகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் எனது பெயரை போட்டு எனக்கு மரியாதை கொடுத்த இயக்குனர் சிவாவுக்கும் படக்குழுவினர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொள்ளவதாக கூறியுள்ளார் .