அஜித் ரசிகர்கள் பல நாட்களாக எதிர் பார்த்த 57வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் அஜித் எப்படி இருப்பார், படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில் தற்போது பெயர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.
அஜித்தின் ராசியான நாள் என்று கூறப்படும் வியாழ கிழமை சென்டிமென்ட் படி இந்த வெளியாகியுள்ளது ஃபர்ஸ்ட்லுக் மற்றும் பெயர். அதேபோல் இந்த படத்தின் பெயர் வேகம் அல்லது விவேகம் என இந்த இராண்டில் பெயரில் ஒன்று தான் தகவல் பரவியது போலவே இந்த படத்தின் பெயர் கணிப்பும் சரியாக அமைந்துள்ளது.
சிறுத்தை சிவா அஜித்தை வைத்து ஏற்கனவே எடுத்த இரண்டு படங்களின் பெயர்களும் வி, வே என்ன ஒரே கோர்வையில் அமைந்தது போல இந்த படமும் விவேகம் என வி இல் ஆரமித்து ம் இல் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும், அனைவரையும் ஆச்சரிய படுத்தும் வகையில் சிக்ஸ் பேக் உடலுடன்வந்து மாஸ் காட்டி, அரச வைத்திருக்கிறார் அஜித்
மேலும் இன்று அதிகாலை டைட்டில் வெளியான வினாடி முதல் சமூக வலைத்தளங்களில் மிக வேகமான ஷேர் செய்யப்பட்டு ஒருசில நிமிடங்களில் உலக அளவில் டிரெண்ட் ஆனது விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்.
அதுமட்டுமின்றி ஃபர்ஸ்ட்லுக் வெளியான பத்தே நிமிடங்களில் மதுரை, திருநெல்வேலியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் 'விவேகம்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தயார் செய்து ஒட்டி வருகின்றனர். 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து பார்க்கும்போது இந்த படத்தின் வசூல் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
