தல அஜித் எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ கலந்து கொள்வது இல்லை. அவ்வளவு ஏன் தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கோ, பட பூஜைக்கோ வெற்றி விழாவிற்கோ கூட தல அஜித் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

இறுதியாக கலைஞர் பாராட்டு விழாவின் போது நேரடியாக இனி தங்களை பொது நிகழ்ச்சிக்கோ, அரசியல் நிகழ்ச்சிக்கோ நடிகர்களை வற்புறுத்துகிறார்கள் என்று பேசிய வீடியோ பெரும் வைரலானது என்று அதன் பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்வது இல்லை.

இந்நிலையில் இத்தனை ஆன்டுகள் கழித்து நடிகர் அஜித் ஸ்ரீதேவிக்காக தனது கொள்கையை தளர்த்துள்ளார். ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 24 ஆம் தேதி தினம் இதற்காக சென்னையில் உள்ள தனியார் இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் இந்த திடீர் மனமாற்றத்தால் தல ரசிகர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அஜித்தும் ஸ்ரீதேவியும் நண்பர்களாக இருந்து வந்தனர் இருவரும் இணைந்து "இங்கிலிஷ் விங்கிலீஷ்" படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதிக்காக தான் தற்போது அஜித் போனி கபூர் தான் ‘தல 59’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.