ajith fans support vijay mersal
நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் உண்மையில் நல்ல நண்பர்களாகப் பழகி வந்தாலும். இவர்களுடைய ரசிகர்கள் மட்டும் எதற்கெடுத்தாலும் சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்டே இருப்பார்கள்.
இவர்களுடைய சண்டை படப்பிடிப்பு நாளில் தொடங்கி, டீசர், இசை வெளியீட்டு விழா, படம் ரிலீஸ், மற்றும் யார் திரைப்படம் அதிக வசூல் செய்கிறது என்பது வரை நீண்டு கொண்டே இருக்கும்.
தற்போது அஜித் ரசிகர்கள் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு ஆதரவாக தங்களுடைய கருத்தைக் கூறியுள்ளனர். விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் படத்தில் GST பற்றிய வசனம் உள்ளது அதனை நீக்க வேண்டும் என்று பாஜக., கூறி இருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் அஜித் ரசிகர்கள், அந்தக் காட்சிக்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு உள்ளது ஆகவே நீக்கக் கூடாது எனக் கூறி சப்போர்ட் செய்துள்ளனர்.
