பட விழாக்கள் மற்றும் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, சோசியல் மீடியாவையும் முற்றிலும் தவிர்த்து வருகிறார் நம்ம தல. ஆன்ட்ராய்டு போன் கூட வேண்டாம் என, சாதாரண நோக்கியா மொபைலை மட்டுமே அஜித் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகரான தல அஜித் டுவிட்டருக்கு வரவேண்டுமென இந்தியாவின் டுவிட்டர் மேனேஜிங் டைரக்டர் அழைப்பு விடுத்திருந்தார்.  

இதனை ஆதரிக்கும் விதமாக பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், அஜித் டுவிட்டருக்கு வர வேண்டும் என நான் மிகவும் விரும்புகிறேன். என்னைப் போல் யாரெல்லாம் நினைக்கிறீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார். அவர் நல்ல எண்ணத்தில் கேட்டிருந்தாலும்,  தல ரசிகர்கள்கள் யாஷிகாவை கலாய்த்து நக்கலாக தான் கமெண்ட் செய்து வருகின்றனர். 

சிலர் மட்டும் யாஷிகாவின் கருத்திற்கு ஆதரவாக, தல ட்விட்டருக்கு வந்தால் நல்லா தான் இருக்கும் என்று பதிலளித்துள்ளனர். ஆனால் சில நெட்டிசன்களோ, நீயே ட்விட்டரில் இருக்கும் போது தல வரக்கூடாதா என்று நக்கலாக பதிலளித்துள்ளனர். உங்கள் ஆசை நிறைவேற வாய்ப்பே இல்லை, தல டுவிட்டருக்கு வரவேமாட்டார் என்றும் கமெண்ட் போட்டுள்ளனர்.

இதில் சந்தடி சாக்கில் நுழைந்த விஜய் ரசிகர்களோ அஜித் டுவிட்டருக்கு வர பயப்படுறார் என்றும், பட்டன் வச்சியிருக்கிற நோக்கியா போன்ல எப்படி ட்வீட் செய்ய முடியும்னு என்றும் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். 

விஜய் ஃபேன்ஸ் போடுற கமெண்ட்ஸால ஓவர் கடுப்பான அஜித் ரசிகர்கள் வடிவேலு மீம்ஸ்களை போட்டு யாஷிகாவை பங்கமா கலாய்ச்சிட்டு இருக்காங்க. பாவம்! யாஷிகா ஏன்டா இந்த கேள்வியைக் கேட்டோம்ன்னு இப்போ ஃபீல் பண்ணிட்டு இருப்பாங்க...!