அஜித் ரசிகர்கள், பிரான்சில் நேர்கொண்ட பார்வை படம் திரையிடப்பட்ட 'லீ கிராண்ட் ரெக்ஸ்' திரையரங்கில் செய்த அட்டகாசத்தால், அந்த திரையரங்கம் இனி தமிழ் படங்களையே திரையிட கூடாது என்கிற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்று பிரான்ஸ் நாட்டின் அமைத்துள்ள  'லீ கிராண்ட் ரெக்ஸ்' திரையரங்கம். இங்கு இதுவரை 5 திற்கும் குறைவான தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை, ரெக்ஸ் திரையரங்கில் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள், திரையரங்கள் உள்ளேயே பட்டாசு வெடித்து, அட்டகாசம் செய்தது, பிரான்ஸ் நாட்டவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள திரையரங்கில் செய்வது போலவே திரையின் முன் ஆடிப்பாடி, பட்டாசு வெடித்து இவர்கள் செய்த அதகளத்தில் 'ரெக்ஸ்' திரையரங்கில் படம் திரையிடப்படும் திரை, சேதமாகியுள்ளது. இதனால் அந்த திரையரங்கத்திற்கு 5.5 லட்சம் ஏற்கப்பட்டுள்ளதாவும்.

வினியோகஸ்தர்கள் ரசிகர்கள் ஏற்படுத்திய சேதத்திற்கு தற்போது நஷ்டஈடு கொடுத்துள்ளனர். இதனால் இனி, தமிழ் படங்களை திரையிட கூடாது என்கிற முடிவை திரையரங்கம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்ரசிகர்களின் இந்த மோசமான செயல் பிரான்ஸ் நாட்டில் வினியோகஸ்தர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும் அஜித் ரசிகர்கள் செய்த ரகளைகள் தற்போது விடியோவாக வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.