ajith fans celebrate in krishnagiri
'தல' அஜித் வரும் மே1 ஆம் தேதி தன்னுடைய 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஒவ்வொரு வருடமும் தொழிலாளர் தினத்தில் அஜித்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டதை சேர்ந்த அஜித் ரசிகர்கள், காவேரிப்பட்டினத்தில் உள்ள அன்னை அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை வழங்கினர்.

மேலும் அந்த குழந்தைகளுக்கு இன்று மதிய உணவும் இவர்கள் சார்பாக வழங்கப்பட்டது. இது குறித்து அஜித் ரசிகர்கள் கூறியபோது. இனி தல பிறந்தநாள் விழா ஆதரவற்றவர்களுக்கு தொண்டு செய்யும் விதமாக கொண்ட்டாடப்படும் என தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காவேரிப்பட்டினம் காவல் ஆய்வாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
