எந்த ஒரு திரையுலக பின்புலமும் இன்றி, திரையுலகில் அறிமுகமாகி... பல்வேறு தடைகள், சவால்களை கடந்து இன்று தன்னுடைய பொறுமையாலும், விடாமுயற்சியாலும் முன்னணி நடிகர் என உயர்ந்து நிற்பவர் தல அஜித். 

வலது கை செய்யும் உதவி, இடது கைக்கு தெரிய கூடாது என்கிற பழமொழியை பின்பற்றி வரும் இவர், தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்த பின்பும், அவருடைய தீவிர ரசிகர்கள்... அஜித் பெயரில் நற்பணி மன்றம் உருவாக்கி அதன் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். 

குறிப்பாக இவரின் உண்மையான ரசிகர் எப்போதுமே அஜித்தின் பெயர் கெட்டு விடுவது போல் நடந்து கொண்டது இல்லை. 

இந்நிலையில் இன்று 48 வது பிறந்த நாள் கொண்டாடும் அஜித்தை சிறப்பிக்கும் வகையில் அவருடைய ரசிகர்கள், ரத்த தான முகம் நடத்தி உயிர் காக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.