Ajith fans are sad The next picture is when
அஜித்தின் அடுத்த படம் அடுத்த இரண்டு வருடங்கள் இழுக்கும் என்ற சோகத்தில் அஜித் ரசிகர்கள் உள்ளனர். மேலும், அடுத்த படமும் சிவாவுடன் இருந்தால் அது ரசிகர்களிடையே சலிப்பை தான் ஏற்படுத்தும் என்றும் வருந்துகின்றனர்.
தல அஜித் நடிப்பில் சமீபத்தில் விவேகம் படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல லாபம் பார்த்துவிட்டது.
விவேகம் படம் வரவே இரண்டு வருடம் ஆன நிலையில் அவருடைய ரசிகர்கள் அஜித்தை மீண்டும் விரைவில் திரையில் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆனால், அஜித்திற்கு சமீபத்தில் தான் தோள் பட்டையில் சிகிச்சை முடிந்துள்ளது, மருத்துவர்கள் இவரை மூன்று மாதம் ஓய்வு எடுக்க கூறியுள்ளனர்.
அதனால், அஜித்தின் அடுத்தப் படத்தின் அறிவிப்பே அடுத்த வருடத்தில் தான் தெரியும் என்றும் அதோடு அஜித்திற்கு கதை சொல்ல பல இயக்குனர்கள் வந்து சென்றாலும் அவரின் தேர்வோ சிவா-வாக இருந்தால் அஜித் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும் என்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
