பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி,மெர்குரி என தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் தற்போது வரை வெற்றிநடைப்போட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; நீங்கள் தமிழ் சினிமாவில் ரஜினியை வைத்து படம் பண்ணிய நீங்கள்,  தல தளபதியை வைத்து படம் இயக்கினால்  என்ன மாதிரியான படத்தை இயக்குவீர்கள்? என கேட்டதற்கு விஜய்க்கு கேங்க்ஸ்டர் மாதிரியான படம் தான் பண்ணுவேன் என்றார்.

ஆனால், தல அஜித்தாய் வைத்து படம் பண்ணினால் என்ற கேள்விக்கு, காமெடி படம் தான் என கூலாக பதிலளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். கடந்த பொங்கலுக்கு அவர் இயக்கிய பேட்ட படத்துக்கு போட்டியாக வந்த விஸ்வாசம், பேட்ட படத்தைக் விட வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல பேட்ட ட்ரைலருக்கு பதிலடிகொடுக்கும் விதமாக அமைந்ததால் அஜித்தை வைத்து காமெடி படம் பண்ணுவதாக சொல்கிறார் என தல ரசிகர்கள் பயங்கர கோபத்தில் கொந்தளிக்கிறார்கள்.